குறள் எண் : 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது…. சாலமன் பாப்பையா உரை: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.... Read more
குறள் எண் : 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more
குறள் எண் : 198 அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார். கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்…. சாலமன் பாப்பையா உரை: நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 196 பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே... Read more
குறள் எண் : 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்…. சாலமன் பாப்பையா உரை: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும். கலைஞர்... Read more
குறள் எண் : 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்…. சாலமன் பாப்பையா உரை: பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை... Read more
குறள் எண் : 193 நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்…. சாலமன் பாப்பையா உரை: பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.... Read more
குறள் எண் : 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும்... Read more
குறள் எண் : 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான். கலைஞர் மு.கருணாநிதி உரை: பலரும் வெறுக்கும்படியான... Read more