குறள் எண் : 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்…. சாலமன் பாப்பையா உரை: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 256 தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்…. சாலமன் பாப்பையா உரை: தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில்... Read more
குறள் எண் : 255 உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது…. சாலமன் பாப்பையா உரை: இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை... Read more
குறள் எண் : 254 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது…. சாலமன் பாப்பையா உரை: இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம்... Read more
குறள் எண் : 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது…. சாலமன் பாப்பையா உரை: கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது... Read more
குறள் எண் : 252 பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால்... Read more
குறள் எண் : 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்…. சாலமன் பாப்பையா உரை: தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி... Read more
குறள் எண் : 250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அருள் இல்லாதவள், தன்னைவிட... Read more
குறள் எண் : 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம்... Read more
குறள் எண் : 248 பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர்... Read more