குறள் எண் : 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது….. சாலமன் பாப்பையா உரை: கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால்... Read more
குறள் எண் : 156 ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ... Read more
குறள் எண் : 155 ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு... Read more
குறள் எண் : 154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.... Read more
குறள் எண் : 153 இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்…. சாலமன் பாப்பையா உரை: வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப்... Read more
குறள் எண் : 152 பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது…. சாலமன் பாப்பையா உரை: தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக்... Read more
குறள் எண் : 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப்... Read more
குறள் எண் : 150 அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது…. சாலமன் பாப்பையா உரை: அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது... Read more
குறள் எண் : 149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால்,... Read more
குறள் எண் : 148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ ஆன்ற வொழுக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான... Read more