திருக்குறள்- குறள் 738

குறள் எண் : 738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை... Read more

திருக்குறள்- குறள் 737

குறள் எண் : 737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும்... Read more

திருக்குறள்- குறள் 736

குறள் எண் : 737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும்... Read more

திருக்குறள்- குறள் 735

குறள் எண் : 735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு…. சாலமன் பாப்பையா உரை: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால்... Read more

திருக்குறள்- குறள் 734

குறள் எண் : 734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்…. சாலமன் பாப்பையா உரை: மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து... Read more

திருக்குறள்- குறள் 733

குறள் எண் : 733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்…. சாலமன் பாப்பையா உரை: போர், இயற்கை அழிவு ஆகியவற்றால்... Read more

திருக்குறள்- குறள் 732

குறள் எண் : 732 பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்…… சாலமன் பாப்பையா உரை: மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில்,... Read more

திருக்குறள்- குறள் 731

குறள் எண் : 731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்….. சாலமன் பாப்பையா உரை: குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து... Read more

திருக்குறள்- குறள் 730

குறள் எண் : 730 உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்…… சாலமன் பாப்பையா உரை: அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும்... Read more

திருக்குறள்- குறள் 729

குறள் எண் : 729 கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்….. சாலமன் பாப்பையா உரை: நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து... Read more
Index