திருக்குறள்- குறள் 678

குறள் எண் : 678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும்... Read more

திருக்குறள்- குறள் 677

குறள் எண் : 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை... Read more

திருக்குறள்- குறள் 676

குறள் எண் : 676 முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை,... Read more

திருக்குறள்- குறள் 675

குறள் எண் : 675 பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன்... Read more

திருக்குறள்- குறள் 674

குறள் எண் : 674 வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும்... Read more

திருக்குறள்- குறள் 673

குறள் எண் : 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும்... Read more

திருக்குறள்- குறள் 672

குறள் எண் : 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது….. சாலமன் பாப்பையா உரை: காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய... Read more

திருக்குறள்- குறள் 671

குறள் எண் : 671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்…… சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச்... Read more

திருக்குறள்- குறள் 670

குறள் எண் : 670 எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.... Read more

திருக்குறள்- குறள் 669

குறள் எண் : 669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில்... Read more
Index