திருக்குறள்- குறள் 388

குறள் எண் : 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 387

குறள் எண் : 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற... Read more

திருக்குறள்- குறள் 386

குறள் எண் : 386 காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்…. சாலமன் பாப்பையா உரை: நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால்,... Read more

திருக்குறள்- குறள் 384

குறள் எண் : 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில்... Read more

திருக்குறள்- குறள் 383

குறள் எண் : 383 தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை…. சாலமன் பாப்பையா உரை: செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை... Read more

திருக்குறள்- குறள் 382

குறள் எண் : 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு,... Read more

திருக்குறள்- குறள் 381

குறள் எண் : 381 படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்…. சாலமன் பாப்பையா உரை: வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக்... Read more
Index