திருக்குறள்- குறள் 114

குறள் எண் : 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்….

சாலமன் பாப்பையா உரை:

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *