திருக்குறள்- குறள் 1312

11 / 100

குறள் எண் : 1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா உரை:

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *