திருக்குறள்- குறள் 212

4 / 100

குறள் எண் : 212

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்….

சாலமன் பாப்பையா உரை:

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *