திருக்குறள்- குறள் 323

4 / 100

குறள் எண் : 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது….

சாலமன் பாப்பையா உரை:

உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *