திருக்குறள்- குறள் 327

4 / 100

குறள் எண் : 327

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது….

சாலமன் பாப்பையா உரை:

தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *