திருக்குறள்- குறள் 379

4 / 100

குறள் எண் : 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ….

சாலமன் பாப்பையா உரை:

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *