திருக்குறள்- குறள் 396

4 / 100

குறள் எண் : 396

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்….

சாலமன் பாப்பையா உரை:

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *