திருக்குறள்- குறள் 411

4 / 100
   

குறள் எண் : 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்….

சாலமன் பாப்பையா உரை:

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *