திருக்குறள்- குறள் 431

4 / 100

குறள் எண் : 431

செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்….

சாலமன் பாப்பையா உரை:

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *