திருக்குறள்- குறள் 520

4 / 100

குறள் எண் : 520

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *