திருக்குறள்- குறள் 571

8 / 100

குறள் எண் : 571

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது….

சாலமன் பாப்பையா உரை:

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *