திருக்குறள்- குறள் 578

8 / 100

குறள் எண் : 578

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது….

சாலமன் பாப்பையா உரை:

தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *