திருக்குறள்- குறள் 594

8 / 100

குறள் எண் : 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்….

சாலமன் பாப்பையா உரை:

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *