திருக்குறள்- குறள் 656

8 / 100

குறள் எண் : 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.....

சாலமன் பாப்பையா உரை:

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *