திருக்குறள்- குறள் 687

11 / 100

குறள் எண் : 687

கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.….

சாலமன் பாப்பையா உரை:

தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *