திருக்குறள்- குறள் 706

8 / 100

குறள் எண் : 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்..….

சாலமன் பாப்பையா உரை:

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *