குறள் எண் : 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய்... Read more
குறள் எண் : 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப்... Read more
குறள் எண் : 225 ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்…. சாலமன் பாப்பையா உரை: வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே... Read more
குறள் எண் : 224 இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது…. சாலமன் பாப்பையா உரை: கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த... Read more
குறள் எண் : 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத்... Read more
குறள் எண் : 222 நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது…. சாலமன் பாப்பையா உரை: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது... Read more
குறள் எண் : 221 வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும்... Read more
குறள் எண் : 220 ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே... Read more
குறள் எண் : 219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்…. சாலமன் பாப்பையா உரை: உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது... Read more
குறள் எண் : 218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம்... Read more