குறள் எண் : 207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்…. சாலமன் பாப்பையா உரை: எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக்... Read more
குறள் எண் : 206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 205 இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்…. சாலமன் பாப்பையா உரை: தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.... Read more
குறள் எண் : 204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்…. சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு... Read more
குறள் எண் : 203 அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று... Read more
குறள் எண் : 202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்…. சாலமன் பாப்பையா உரை: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால்,... Read more
குறள் எண் : 201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்…. சாலமன் பாப்பையா உரை: தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.... Read more
குறள் எண் : 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது…. சாலமன் பாப்பையா உரை: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.... Read more
குறள் எண் : 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more
குறள் எண் : 198 அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார். கலைஞர் மு.கருணாநிதி... Read more