திருக்குறள்- குறள் 106

குறள் எண் : 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது…. சாலமன் பாப்பையா உரை: உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின்... Read more

திருக்குறள்- குறள் 105

குறள் எண் : 105 உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது,... Read more

திருக்குறள்- குறள் 104

குறள் எண் : 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்…. சாலமன் பாப்பையா உரை: தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர்... Read more

திருக்குறள்- குறள் 103

குறள் எண் : 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்…. சாலமன் பாப்பையா உரை: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர்... Read more

திருக்குறள்- குறள் 102

குறள் எண் : 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்…. சாலமன் பாப்பையா உரை: நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும்,... Read more

திருக்குறள்- குறள் 101

குறள் எண் : 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும்,... Read more

திருக்குறள்- குறள் 100

குறள் எண் : 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள்... Read more

திருக்குறள்- குறள் 99

குறள் எண் : 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?…. சாலமன் பாப்பையா உரை: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம்... Read more

திருக்குறள்- குறள் 98

குறள் எண் : 98 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.... Read more

திருக்குறள்- குறள் 97

குறள் எண் : 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும்,... Read more
Index