குறள் எண் : 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும்,... Read more
குறள் எண் : 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல…. சாலமன் பாப்பையா உரை: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள்... Read more
குறள் எண் : 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்…. சாலமன் பாப்பையா உரை: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது. கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more
குறள் எண் : 93 முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச்... Read more
குறள் எண் : 92 அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்…. சாலமன் பாப்பையா உரை: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும்... Read more
குறள் எண் : 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல். கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்…. சாலமன் பாப்பையா உரை: தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த... Read more
குறள் எண் : 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்…. சாலமன் பாப்பையா உரை: செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.... Read more
குறள் எண் : 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்…. சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச்... Read more
குறள் எண் : 1 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின துணைத்துணை வேள்விப் பயன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்…. சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு... Read more