திருக்குறள்- குறள் 46

குறள் எண் : 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன? சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில்... Read more

திருக்குறள்- குறள் 45

குறள் எண் : 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால்... Read more

திருக்குறள்- குறள் 44

குறள் எண் : 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை…. சாலமன் பாப்பையா உரை: பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை... Read more

திருக்குறள்- குறள் 43

குறள் எண் : 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்…. சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும்... Read more

திருக்குறள்- குறள் 42

குறள் எண் : 42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்…. சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன். கலைஞர் மு.கருணாநிதி உரை: பற்றற்ற துறவிகட்கும், பசியால்... Read more

திருக்குறள்- குறள் 41

குறள் எண் : 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்…. சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 40

குறள் எண் : 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிக்கத்... Read more

திருக்குறள்- குறள் 39

குறள் எண் : 39 அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை…. சாலமன் பாப்பையா உரை: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.... Read more

திருக்குறள்- குறள் 38

குறள் எண் : 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தை செய்யாது விட்ட நாள்... Read more

திருக்குறள்- குறள் 37

குறள் எண் : 37 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா…. சாலமன் பாப்பையா உரை: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை.... Read more
Index