திருக்குறள்- குறள் 478

குறள் எண் : 478 ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 477

குறள் எண் : 477 ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கு நெறி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்…. சாலமன் பாப்பையா உரை: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை... Read more

திருக்குறள்- குறள் 476

குறள் எண் : 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற... Read more

திருக்குறள்- குறள் 475

குறள் எண் : 475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்…. சாலமன் பாப்பையா உரை: மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்... Read more

திருக்குறள்- குறள் 474

குறள் எண் : 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக... Read more

திருக்குறள்- குறள் 473

குறள் எண் : 473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்…. சாலமன் பாப்பையா உரை: தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித்... Read more

திருக்குறள்- குறள் 472

குறள் எண் : 472 ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே... Read more

திருக்குறள்- குறள் 471

குறள் எண் : 471 வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும்... Read more

திருக்குறள்- குறள் 470

குறள் எண் : 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால்... Read more

திருக்குறள்- குறள் 469

குறள் எண் : 469 நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்…. சாலமன் பாப்பையா உரை: அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும். கலைஞர்... Read more
Index