குறள் எண் : 337 ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்…. சாலமன் பாப்பையா உரை: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும்... Read more
குறள் எண் : 336 நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்…. சாலமன் பாப்பையா உரை: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது... Read more
குறள் எண் : 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்…. சாலமன் பாப்பையா உரை: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.... Read more
குறள் எண் : 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது…. சாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப்... Read more
குறள் எண் : 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. கலைஞர்... Read more
குறள் எண் : 332 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல்... Read more
குறள் எண் : 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்…. சாலமன் பாப்பையா உரை: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 330 உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால்,... Read more
குறள் எண் : 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்…. சாலமன் பாப்பையா உரை: கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள்... Read more
குறள் எண் : 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்…. சாலமன் பாப்பையா உரை: வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக்... Read more