திருக்குறள்- குறள் 317

குறள் எண் : 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது…. சாலமன் பாப்பையா உரை: எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே... Read more

திருக்குறள்- குறள் 316

குறள் எண் : 316 இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 315

குறள் எண் : 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ…. சாலமன் பாப்பையா உரை: அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப்... Read more

திருக்குறள்- குறள் 314

குறள் எண் : 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்…. சாலமன் பாப்பையா உரை: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு... Read more

திருக்குறள்- குறள் 313

குறள் எண் : 313 செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம்... Read more

திருக்குறள்- குறள் 312

குறள் எண் : 312 கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்…. சாலமன் பாப்பையா உரை: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 311

குறள் எண் : 311 சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்…. சாலமன் பாப்பையா உரை: சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 310

குறள் எண் : 310 இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்…. சாலமன் பாப்பையா உரை: பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத்... Read more

திருக்குறள்- குறள் 309

குறள் எண் : 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 308

குறள் எண் : 308 இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது…. சாலமன் பாப்பையா உரை: பல சுடரை உடைய பெருநெருப்பு நம்... Read more
Index