குறள் எண் : 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்….. சாலமன் பாப்பையா உரை: வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச்... Read more
குறள் எண் : 657 பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது…. சாலமன் பாப்பையா உரை: பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை... Read more
குறள் எண் : 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது….. சாலமன் பாப்பையா உரை: தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச்... Read more
குறள் எண் : 655 எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது…. சாலமன் பாப்பையா உரை: என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும்... Read more
குறள் எண் : 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்….. சாலமன் பாப்பையா உரை: தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.... Read more
குறள் எண் : 653 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை... Read more
குறள் எண் : 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.. கலைஞர்... Read more
குறள் எண் : 651 துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும்... Read more
குறள் எண் : 650 இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரிந்துரையா தார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்…. சாலமன் பாப்பையா உரை: தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர்,... Read more
குறள் எண் : 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்…. சாலமன் பாப்பையா உரை: குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர். கலைஞர் மு.கருணாநிதி... Read more