குறள் எண் : 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்…. சாலமன் பாப்பையா உரை: உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப்... Read more
குறள் எண் : 626 அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புதல் தேற்றா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ…. சாலமன் பாப்பையா உரை: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில்... Read more
குறள் எண் : 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம்... Read more
குறள் எண் : 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல... Read more
குறள் எண் : 623 இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்…. சாலமன் பாப்பையா உரை: வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்..... Read more
குறள் எண் : 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்…. சாலமன் பாப்பையா உரை: வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன்,... Read more
குறள் எண் : 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை….. சாலமன் பாப்பையா உரை: நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம்... Read more
குறள் எண் : 620 ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்…. சாலமன் பாப்பையா உரை: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். கலைஞர்... Read more
குறள் எண் : 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல்... Read more
குறள் எண் : 618 பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி…. சாலமன் பாப்பையா உரை: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து... Read more