குறள் எண் : 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்…. சாலமன் பாப்பையா உரை: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more
குறள் எண் : 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: முயற்சி... Read more
குறள் எண் : 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய... Read more
குறள் எண் : 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி,... Read more
குறள் எண் : 613 தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே.... Read more
குறள் எண் : 611 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும்... Read more
குறள் எண் : 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்…. சாலமன் பாப்பையா உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத... Read more
குறள் எண் : 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும். கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 608 இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்….. சாலமன் பாப்பையா உரை: சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால்... Read more