திருக்குறள்- குறள் 297

குறள் எண் : 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.... Read more

திருக்குறள்- குறள் 296

குறள் எண் : 296 பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது... Read more

திருக்குறள்- குறள் 295

குறள் எண் : 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன்... Read more

திருக்குறள்- குறள் 294

குறள் எண் : 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம்... Read more

திருக்குறள்- குறள் 293

குறள் எண் : 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப்... Read more

திருக்குறள்- குறள் 292

குறள் எண் : 292 பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்…. சாலமன் பாப்பையா உரை: குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும்... Read more

திருக்குறள்- குறள் 291

குறள் எண் : 1 வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும்... Read more

திருக்குறள்- குறள் 290

குறள் எண் : 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது…. சாலமன் பாப்பையா உரை: திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.... Read more

திருக்குறள்- குறள் 289

குறள் எண் : 289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச்... Read more

திருக்குறள்- குறள் 288

குறள் எண் : 288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு குறள் விளக்கம் அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்…. சாலமன் பாப்பையா உரை: உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன்... Read more
Index