திருக்குறள்- குறள் 287

குறள் எண் : 287 களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.... Read more

திருக்குறள்- குறள் 286

குறள் எண் : 286 அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத்... Read more

திருக்குறள்- குறள் 285

குறள் எண் : 285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர்,... Read more

திருக்குறள்- குறள் 284

குறள் எண் : 284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத்... Read more

திருக்குறள்- குறள் 283

குறள் எண் : 283 களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்…. சாலமன் பாப்பையா உரை: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி... Read more

திருக்குறள்- குறள் 282

குறள் எண் : 282 உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும்... Read more

திருக்குறள்- குறள் 281

குறள் எண் : 281 எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத்... Read more

திருக்குறள்- குறள் 280

குறள் எண் : 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா…. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி... Read more

திருக்குறள்- குறள் 279

குறள் எண் : 279 கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை வினைபடு பாலாற் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது... Read more

திருக்குறள்- குறள் 278

குறள் எண் : 278 மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்…. சாலமன் பாப்பையா உரை: மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து... Read more
Index