குறள் எண் : 466 செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். கலைஞர் மு.கருணாநிதி உரை: செய்யக்... Read more
குறள் எண் : 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்…. சாலமன் பாப்பையா உரை: முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச்... Read more
குறள் எண் : 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச்... Read more
குறள் எண் : 463 ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற... Read more
குறள் எண் : 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச்... Read more
குறள் எண் : 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து,... Read more
குறள் எண் : 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம்... Read more
குறள் எண் : 459 மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more
குறள் எண் : 458 மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்…. சாலமன் பாப்பையா உரை: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும். கலைஞர்... Read more
குறள் எண் : 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும்... Read more