திருக்குறள்- குறள் 456

குறள் எண் : 456 மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே... Read more

திருக்குறள்- குறள் 455

குறள் எண் : 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்…. சாலமன் பாப்பையா உரை: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை... Read more

திருக்குறள்- குறள் 454

குறள் எண் : 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன்... Read more

திருக்குறள்- குறள் 453

குறள் எண் : 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்…. சாலமன் பாப்பையா உரை: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன்... Read more

திருக்குறள்- குறள் 452

குறள் எண் : 452 நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை... Read more

திருக்குறள்- குறள் 451

குறள் எண் : 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்…. சாலமன் பாப்பையா உரை: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி... Read more

திருக்குறள்- குறள் 450

குறள் எண் : 450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக்... Read more

திருக்குறள்- குறள் 449

குறள் எண் : 449 முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்  சார்பிலார்க் கில்லை நிலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே... Read more

திருக்குறள்- குறள் 448

குறள் எண் : 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்….. சாலமன் பாப்பையா உரை: தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத... Read more

திருக்குறள்- குறள் 447

குறள் எண் : 447 இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்…. சாலமன் பாப்பையா உரை: தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக்... Read more
Index