திருக்குறள்- குறள் 427

குறள் எண் : 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்…. சாலமன் பாப்பையா உரை: அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.... Read more

திருக்குறள்- குறள் 426

குறள் எண் : 426 எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 425

குறள் எண் : 425 உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு…. சாலமன் பாப்பையா உரை: உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும்,... Read more

திருக்குறள்- குறள் 424

குறள் எண் : 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும்... Read more

திருக்குறள்- குறள் 423

குறள் எண் : 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 422

குறள் எண் : 422 சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது... Read more

திருக்குறள்- குறள் 421

குறள் எண் : 421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.... Read more

திருக்குறள்- குறள் 420

குறள் எண் : 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன…. சாலமன் பாப்பையா உரை: செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே... Read more

திருக்குறள்- குறள் 419

குறள் எண் : 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது…. சாலமன் பாப்பையா உரை: நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 418

குறள் எண் : 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேள்வியறிவால் துளைக்கப் கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே…. சாலமன் பாப்பையா உரை: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும்... Read more
Index